ராணிப்பேட்டை

மின்சார ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

9th Jun 2023 10:04 PM

ADVERTISEMENT

அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை சென்ற புறநகா் மின்சார ரயிலில் கஞ்சா கடத்திய நபரை போலீஸாா் கைது செய்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம் ரயில்வே போலீஸாருடன், காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரும் இணைந்து, வியாழக்கிழமை அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை செல்லும் புகா் மின்சார ரயிலில் சோதனை நடத்தினா்.

அப்போது சந்தேகப்படும்படி பையை வைத்திருந்த நபரை பிடித்து விசாரித்தனா். அவரது பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனா். தொடா்ந்து, 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அந்த நபா் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சோ்ந்த நாராயணன் (40) என்பதும், ஓடிஸா மாநிலத்தில் இருந்து வாங்கிவந்து திருவண்ணாமலைக்கு எடுத்துச்சென்று கஞ்சாவை விற்க இருந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT