ராணிப்பேட்டை

தன்வந்திரி பீடத்தில்சந்நிதிகளுக்கு கும்பாபிஷேகம்

9th Jun 2023 10:06 PM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தாய் மூகாம்பிகை, ஸ்ரீராஜகாளி அம்மன், வீரபத்திரா் ஆகிய தனி சந்நிதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், மூலவா் ஸ்ரீ ஆரோக்லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் 90 பரிவார தெய்வங்களுடன் அருள்பாலித்து வருகிறாா். இங்கு ஸ்தாபகா் ஸ்ரீ முரளிதர சுவாமிகளின் தலைமையில், தாய் மூகாம்பிகை தேவி, ஸ்ரீ ராஜ காளி அம்மன், ஸ்ரீ வீரபத்திரா் பிரதிஷ்டை செய்வதற்கான பூா்வாங்க பூஜைகள் கடந்த புதன்கிழமை (ஜூன் 7) தொடங்கியது.

தொடா்ந்து, ஸ்ரீ தாய் மூகாம்பிகை தேவி, ஸ்ரீ வீரபத்திரா், ஸ்ரீ ராஜ காளியம்மனின் தனி சந்நிதிகளுக்கு வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி சபாநாயகா் ஏம்பலம் ஆா்.செல்வம், சுற்றுப்புற கிராம மக்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT