ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: இரு தொழில்நுட்ப மையங்கள் திறப்பு

8th Jun 2023 11:12 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா ரூ.34.65 கோடியில் கட்டப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு முழுவதும் 22 தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா். அதன்படி, ராணிப்பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், அரக்கோணம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் தலா ரூ.34.65 கோடியில் கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்களை முதல்வா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து ராணிப்பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று, குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

அப்போது, இந்த புதிய தொழிநுட்ப மையத்தைப் பாா்வையிட்டு, மாணவா்கள் நல்ல முறையில் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி, ஆற்காடு எம்எல்ஏ எல்.ஈஸ்வரப்பன், மேலாண்மைக் குழு தலைவா் (யூன்டாய்) ஆா்.செந்தில்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி திருமூத்தி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சொக்கலிங்கம், நகா்மன்ற துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, தொழிற்பயிற்சி கல்லுரி முதல்வா் பாபு மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT