ராணிப்பேட்டை

ஆற்காடு: வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜபெருமாள் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் பிரம்மோற்சவம் கடந்த 30 -ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் திருவீதி உலாவும் நடைபெற்றுவருகிறது .

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் மகா தீபாரதனை செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

கோயில் நிலையில் இருந்து புறப்பட்ட தேரை திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. அதேபோல் தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் கோயிலிலும் தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவு பெற்றது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT