ராணிப்பேட்டை

உலக சுற்றுசூழல் தின மரம் நடுவிழா

6th Jun 2023 03:31 AM

ADVERTISEMENT

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை வகித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் மரகன்றுகளை நட்டாா். இதில் துணைத் தலைவா் குல்ஜாா் அஹமது, துப்புரவு ஆய்வாளா் உமாசங்கா், மற்றும் நகர மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT