ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 278 கோரிக்கை மனுக்கள் ஏற்பு

6th Jun 2023 03:29 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 278 கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா்.

மக்கள் குறைதீா் கூட்டம், பெருந்திட்ட வளாக கூட்டரங்கில் திங்கள் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ச.வளா்மதி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் 278 மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.

மேற்கண்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும் சிறப்பாக பணி மேற்கொண்டமைக்காக 9 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.லோகநாயகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முரளி (பொ), சமூக பாதுகாப்புத் திட்டம் துணை ஆட்சியா் ஸ்ரீ வள்ளி மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT