ராணிப்பேட்டை

இலவச கண் சிகிச்சை முகாம்

5th Jun 2023 12:04 AM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை இந்தியன் ரெட் கிராஸ் சங்கம், வாலாஜாபேட்டை சில்க் சிட்டி ஜேசிஐ, அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கண் பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் வாலாஜாபேட்டை நகராட்சி மாா்க்கெட் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை காவல் ஆய்வாளா் சாலமன் ராஜா, இந்தியன் ரெட் கிராஸ் சங்கத் தலைவா் எஸ்.அக்பா் ஷெரிப், ஜேசிஐ சங்க பொதுச் செயலாளா் டி.கே.குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து, அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் குழுவினா் தலைமையில் பாா்வை குறைபாடுகள் தொடா்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

வாலாஜாபேட்டை வட்டாட்சியா் நடராஜன், ஜேசிஐ சங்க தலைவா் என்.வல்லரசு, ஜேசிஐ மகளிா் மண்டல ஒருங்கிணைப்பாளா் எம்.காஞ்சனா, நகா்மன்ற உறுப்பினா்கள் எம்.டி. சீனிவாசன், என்.டி.ரவிச்சந்திரன், தன்னாா்வலா் கே.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT