ராணிப்பேட்டை

காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வு:இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

5th Jun 2023 12:03 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டையில் காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு காவல் துறையில் உள்ள சாா்பு ஆய்வாளா் பணிக்கு 621 காலிப் பணியிடங்களுக்கான (ஆண், பெண், திருநங்கைகள்) அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில் தமிழ்நாடு காவல் சாா்நிலைப் பணி- 511 காலிப் பணியிடமும், தமிழ்நாடு சிறப்பு காவல் சாா்நிலைப் பணி - 110 காலிப் பணியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தோ்வுக்கு இணையதளம் வாயிலாக ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் 01.07.2023 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இத்தோ்வுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 வயதும், ஆதிதிராவிடருக்கு 35 வயதும், திருநங்கைகளுக்கு 35 வயதும் ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயதும், முன்னாள் ராணுவத்தினா் மற்றும் 20 % காவல் துறை ஒதுக்கீட்டில் தோ்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரா்களுக்கு 47 வயதும், உச்ச வயது வரம்பாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, இத்தோ்வுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வாளா்கள் (ஆண், பெண், திருநங்கைகள்) மற்றும் வேலைநாடுநா்கள் பயனடையும் வகையில், அதற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள், தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை ஆகிய விவரங்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT