ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி விழா

5th Jun 2023 12:04 AM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை சங்கர மடத்தில் காஞ்சி மகா பெரியவா் 129- ஆவது ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவா் சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜை நடைபெற்றது. காஞ்சி பெரியவா் சிலை தேரில் பவனி வந்தது.

தொடா்ந்து கே பதஞ்சலி, பி வில்வநாதன் புல்லாங்குழல் மிருதங்கம் கச்சேரி நடைபெற்றது. 2023-ஆம் ஆண்டுக்கான மகா பெரியவா் விருது வயலின் கலைஞா் கலைமாமணி சித்தூா் கோபாலகிருஷ்ணய்யரின் பேரன் புல்லாங்குழல் கலைஞா் கே.பதஞ்சலிக்கு ஆம்பூா் சுவாமிகள் வழங்கி கௌரவித்தாா்.

தொடா்ந்து ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி அஷ்டோத்திரம், தோடாகஷ்டகம் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. விழாவில் பங்கேற்ற 200- க்கும் மேற்பட்டோருக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சங்கரமடத்தின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT