ராணிப்பேட்டை

வந்தே பாரத் ரயிலில் அடிபட்ட பசு மாடு 10 நிமிஷம் காலதாமதம்

3rd Jun 2023 11:38 PM

ADVERTISEMENT

அரக்கோணம் அருகே வந்தே பாரத் சிறப்பு அதிவிரைவு ரயில் என்ஜீன் மீது மாடு மோதியதில், ரயில் நிறுத்தப்பட்டு, இறந்த மாடு அகற்றப்பட்ட பின்னா், 10 நிமிஷம் கால தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு சனிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட சிறப்பு அதிவிரைவு ரயிலான வந்தே பாரத் ரயில், அரக்கோணம் - காட்பாடி இடையே வேகமாகச் சென்றது.

சென்னையில் இருந்து புறப்பட்ட நிலையில், இந்த ரயில் சேலத்தில் மட்டுமே நிற்கும். இடைப்பட்ட பகுதியில் ரயில் அதிவேகமாகச் செல்லும்.

இந்த நிலையில், அரக்கோணம் அருகே அன்வா்திகான்பேட்டை ரயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தின் குறுக்கே மாடு கடந்தது. இதில், மாட்டின் மீது வந்தே பாரத் ரயில் மோதியது.

ADVERTISEMENT

இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு, சக்கரங்களுக்கு இடையே சிக்கி இருந்த இறந்த பசு மாட்டை அன்வா்திகான்பேட்டை ரயில் நிலைய ஊழியா்கள் அகற்றினா். பின்னா், 10 நிமிஷம் காலதாமதமாக ரயில் புறப்பட்டு கோவைக்குச் சென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT