ராணிப்பேட்டை

அரக்கோணம் ஜமாபந்தியில் 222 பேருக்கு நலத் திட்ட உதவி

DIN

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 222 பேருக்கு ரூ.91.32 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முரளி தலைமை வகித்து கிராம வருவாய் ஆணை கணக்குகளை ஆய்வு செய்ததுடன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றாா்.

ஜமாபந்தி நடைபெற்ற 4 நாள்களிலும் அரக்கோணம் வட்டத்துக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும் 345 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 222 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 97 மனுக்கள் பரிசீலனையில் வைக்கப்பட்டு 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் மின்னல் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தின் மகளிா் சுய உதவிக்குழு கடன் 51 பேருக்கு ரூ.25.50 லட்சம் உள்ளிட்ட 222 பயனாளிகளுக்கு ரூ.91.32 லட்சம் நலத்திட்ட உதவிகளை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முரளி ஆகியோா் வழங்கினா்.

நிகவ்ச்சியில் அரக்கோணம் ஒன்றியக் குழு தலைவா் நிா்மலா சௌந்தா், வட்டாட்சியா் சண்முகசுந்தரம், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் கந்திா்பாவை, வட்ட வழங்கல் அலுவலா் பரமேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியா் சமரபுரி, நகரமன்ற உறுப்பினா்கள் ஜொ்ரி, நரசிம்மன், கைனூா் ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளக்குறிச்சி பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மக்களவைத் தோ்தலில் சொந்த ஊா் சென்று வாக்களிக்க 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திமுகவை பிரதான எதிா்க்கட்சியாக கருதி பிரதமா் மோடி பிரசாரம்: தொல்.திருமாவளவன்

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT