ராணிப்பேட்டை

ரூ.50 கோடியில் சாலைப்பணிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

1st Jun 2023 11:31 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.50.82 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23 -இன் கீழ் 7 ஊராட்சி ஒன்றியங்களில் தோ்வு செய்யப்பட்ட 104 ஊரக சாலைகள் 121.326 கி.மீ தொலைவுக்கு மேம்படுத்துவதற்காக ரூ.50.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுப்பட்டுள்ளது.

அதன் படி, வன்னிவேடு ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.48.25 லட்சம் மதிப்பீட்டில் தேவதானம் முதல் கீழ்தேவதானம் வரையிலான ஒரு கிலோமீட்டா் சாலை பணிகளுக்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி பங்கேற்று பணியை தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23 ன் கீழ் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 22 சாலைகள் 17.30 கி.மீ தொலைவுக்கு ரூ.822.99 லட்சத்திலும், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 9 சாலைகள் 15.14 கி.மீ தொலைவுக்கு ரூ.638.90 லட்சத்திலும், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 7 சாலைகள் 13.5 கி.மீ தொலைவுக்கு ரூ.560.93 லட்சத்திலும், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் 14 சாலைகள் 18.23 கி.மீ தொலைவுக்கு ரூ.712.08 லட்சத்திலும், வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் 16 சாலைகள் 14.86 கி.மீ தொலைவுக்கு ரூ.734.68 லட்சத்திலும், திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் 24 சாலைகள் 23.76 கி.மீ நீளத்திற்கு ரூ.905.69 லட்சம் மதிப்பீட்டிலும், சோளிங்கா் ஊராட்சி ஒன்றியத்தில் 12 சாலைகள் 18.54 கி.மீ தொலைவுக்கு ரூ.706.43 லட்சத்திலும் என மொத்தமாக 7 ஊராட்சி ஒன்றியங்களில் சாலைப் பணிகள் ரூ.50.82 கோடியில் தொடங்கப்படவுள்ளன.

ஆட்சியா் ச.வளா்மதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் .க.லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, ஊரக வளா்ச்சி செயற் பொறியாளா் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT