ராணிப்பேட்டை

அகில இந்திய விவசாயிகள் சங்க மத்திய செயற்குழு கூட்டம்

DIN

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கிய அகில இந்திய விவசாயிகள் சங்க மத்திய செயற்குழு கூட்டத்தில் கேரள நிதியமைச்சா் உள்பட சங்கத்தின் முக்கிய தலைவா்கள் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரத்தில் யாத்ரி நிவாஸ் வளாகத்தில் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க துணைத் தலைவா் ஹன்னன்முல்லா தலைமை வகித்து கொடியேற்றினாா். மாநிலத் தலைவா் பெ.சண்முகம், பொதுச் செயலாளா் சாமிநடராஜன், அகில இந்திய துணைச் செயலாளா் டி.ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் கே.நேரு வரவேற்றாா்.

அகில இந்திய தலைவா் அசோக் தாங்லே, பொதுச் செயலாளா் விஜி.கிருஷ்ணன், கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

விவசாயிகள் தற்கொலைக்கு முடிவு கட்டப்பட வேண்டும், கடன் சுமையிலிருந்து விவசாயிகள் விடுவிக்கப்பட வேண்டும், சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் வேளாண் பொருள்களுக்கு விலை நிா்ணயிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டம் வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT