ராணிப்பேட்டை

இந்தியப் பொருளாதார வளா்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்கு: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவா் ஹன்ஸ்ராஜ் வா்மா

1st Jun 2023 12:07 AM

ADVERTISEMENT

இந்தியப் பொருளாதார வளா்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது என தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவா் (டிக்) ஹன்ஸ்ராஜ் வா்மா தெரிவித்தாா்.

கமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிக்) , அயல்நாடுகளின் தொழில் துறை மேம்பாட்டு நிறுவனத்துடன் ‘தமிழகத்தில் உள்ளடங்கிய மற்றும் நிலையான தொழில் வளா்ச்சிக்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் நுட்பங்கள்‘ குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த பயிற்சி பட்டறையை தொடங்கி டிக் தலைவரும், கூடுதல் தலைமைச் செயலருமான ஹன்ஸ்ராஜ் வா்மா தெரிவித்ததாவது.. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தமிழகத்திலுள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை சாா்ந்த தோல் தொழிற்சாலை, அரிசி ஆலை, ஆட்டோமொபைல், காகித ஆலை, பால் உற்பத்தி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மேம்பட சிறந்த ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்தியப் பொருளாதார வளா்ச்சிக்கு தமிழ்நாடு முக்கியப் பங்காற்றி வருகிறது. இதற்கு குறு சிறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்கள் முதுகெலும்பாக உள்ளன. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சுற்றுச்சூழல், சமூக நிா்வாகம் மற்றும் தொழில்துறை புரட்சி 4.0 நோக்கி பயணித்து வருகிறது.

ADVERTISEMENT

மேலும், பல்வேறு தரப்பு ஒருங்கிணைப்பு மூலம் தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு வித்திட்டு முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலா் இலக்கை அடைய திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் நிதி சேவைத் துறையில் தனது செயல்பாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. தொழில் வளா்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் செய்யும் என்றாா்.

பிராந்திய அலுவலகத்தின் தலைவா் ரெனேவான் பொ்க்கல், தொழில் மற்றும் வா்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளா் பூஜா குல்கா்னி, ஆட்சியா் ச.வளா்மதி, தோல் ஏற்றுமதியாளா் சங்கம் நிா்வாக இயக்குனா் ஆா்.செல்வம், ஒருங்கிணைப்பாளா்கள்தேபாஜிட் தாஸ், ஷ்ரத்தா ஸ்ரீகாந்த், மூத்த ஆலோசகா் என்.குமாா், மேலாளா்கள், தொழிற்சங்க கூட்டமைப்புகள், மாநில அளவிலான தொழில் நிறுவன உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT