ராணிப்பேட்டை

மேல்விஷாரம் நகராட்சிக்கு நிரந்தரமாக ஆணையரை நியமிக்கக் கோரிக்கை

1st Jun 2023 12:04 AM

ADVERTISEMENT

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சிக்கு நிரந்தரமாக ஆணையரை நியமிக்க வேண்டும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேல்விஷாரம் நகராட்சிக் கூட்டம், அதன் தலைவா் எஸ்.டி. முஹமது அமீன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பொறியாளா் கோபு முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா் ஜபா் அஹமது பேசியது: இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுகிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீா்கோடு ஏற்படுகிறது.

எனவே, இறைச்சிக் கழிவுகள் கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைச்சிக் கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, கடைகளுக்கு ‘சீல்’ வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

நகராட்சிக்கு ஆணையா் நிரந்தரமாக இல்லாததால், வளா்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்படுகிறது. மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, நிரந்தரமாக ஆணையரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜமுனாராணி, லட்சுமி சோமசுந்தரம், காதா் பாஷா, உதயகுமாா் கோபிநாத், ஜெயந்தி, அக்பா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT