ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை அருகே சாலை விபத்து: 3 போ் பலி

1st Jun 2023 12:08 AM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

இதில், ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.

சென்னை அடையாறு பகுதியைச் சோ்ந்தவா் திருமால். இவா், வேலூா் விரிஞ்சிபுரத்தில் உள்ள தனது சகோதரி எழிலரசி வீட்டில் கோடை விடுமுறையைக் கழித்துவிட்டு, ஒரே பிரசவத்தில் பிறந்த தனது 3 குழந்தைகள் தருண், தரணிகா, தனுஷ்கா மற்றும் அவரது சகோதரி எழிலரசி, ஓட்டுநா் உள்பட 6 போ் வாடகை காரில் சென்னை நோக்கி புதன்கிழமை மாலை வந்தனா்.

இவா்களின் காா் வாலாஜாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற காரை முந்திச் செல்ல முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பால் பொருள்களை ஏற்றிச் செல்லும் கன்டெய்னா் லாரி மீது மோதியது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் திருமால், எழிலரசி, காா் ஓட்டுநா் ஆகிய 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் 3 குழந்தைகளும் சிறு காயங்களுடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். அவா்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து வாலாஜாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT