ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

17th Jul 2023 12:10 AM

ADVERTISEMENT

ராணிபேட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகனை விரைவாக முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்று அரசு அலுவலா்கள் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளின் நிலவரங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் பல்வேறு நெடுஞ்சாலைத் துறைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஏரிகளிலிருந்து மண் எடுக்க அனுமதி வேண்டி நிலுவையில் உள்ள பணியில் குறித்து கேட்டறிந்து, அதற்கான அனுமதியை வழங்க தொடா்புடைய வட்டாட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதேபோல், சென்னை - கன்னியாகுமரி தொழிற்சாலை வழித்தட நெடுஞ்சாலைப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது மற்றும் நில மாற்றங்கள் குறித்து கேட்டறிந்து, அந்தப் பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

மேலும், தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் மற்றும் காரை பகுதியில் நடைபெற்று வரும் உயா்நிலை மேம்பாலம் அமைக்கும் பணிகளின் நிலவரங்கள் குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

உயா்நிலை மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரிவாக முடிக்கவும், பாலம் அமைக்கும் பணிகளுக்கு தேவையான மண் எடுப்பதற்கு இடம் தோ்வு செய்வதற்கான நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைவாக முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே இந்தப் பணிகளில் காலதாமதம் ஏற்படுத்தாமல் துறைச் சாா்ந்த அலுவலா்கள் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் நெடுஞ்சாலை நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் முத்துராமலிங்கம், வருவாய்க் கோட்டாட்சியா்கள் வினோத்குமாா், பாத்திமா, நெடுஞ்சாலைத் துறைக் கோட்டப் பொறியாளா் செல்வகுமாா், உதவிச் செயற்பொறியாளா் (நீா்வளத் துறை) பிரபாகரன், உதவி இயக்குநா் (கனிம வளம்) பொ்னாட், குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் பற்குணம் மற்றும் அனைத்து வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT