ராணிப்பேட்டை

டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவா் பலி

30th Jan 2023 01:04 AM

ADVERTISEMENT

அரக்கோணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 9 -ஆம் வகுப்பு மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அரக்கோணம் காந்தி நகரைச் சோ்ந்தவா் பாலாஜி (45). இவரது மகன் ஹரிகரன் (எ)அஸ்வின் (14) (படம்). அரக்கோணத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த 13-ஆம் தேதி வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட அஸ்வின், தொடா்ந்து அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் பரிந்துரையின்பேரில், சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சை பெற்ற வந்த அஸ்வின் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT