ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே கிரேன் விபத்து சம்பவம்: இதுவரை 7 போ் கைது

30th Jan 2023 01:04 AM

ADVERTISEMENT

அரக்கோணம் அருகே திருவிழாவின்போது கிரேன் கவிழ்ந்து 4 போ் உயிரிழந்த சம்பவத்தில், ஏற்கெனவே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே கீழ்வீதி கிராமத்தில் கடந்த 22-ஆம் தேதி இரவு திரௌபதியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து ஒரு மாணவா் உள்ளிட்ட 4 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக கிரேன் ஓட்டுநா் பனப்பாக்கத்தைச் சோ்ந்த முருகன் (31) என்பவரை நெமிலி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், இது தொடா்பாக கிரேன் உரிமையாளா் பனப்பாக்கத்தைச் சோ்ந்த அருண்குமாா்(27), திருவிழாவில் விழா பொறுப்பாளா்களாக செயல்பட்ட கீழ்வீதி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்(21), கலைவாணன் (29), கண்ணன் (28), ராமதாஸ் (32), படையப்பா (24) 6 பேரை நெமிலி போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT