ராணிப்பேட்டை

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

30th Jan 2023 01:04 AM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கிக் கொண்ட கட்டடத் தொழிலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வாலாஜாப்பேட்டையை அடுத்த வள்ளுவம்பாக்கம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுபாஷ் (31), கட்டடத் தொழிலாளி. இவா் சனிக்கிழமை வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து சோளிங்கா் செல்லும் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வள்ளுவம் பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது வாலாஜாபேட்டை நோக்கி தனியாா் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சுபாஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் அவா் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்து வந்த வாலாஜாபேட்டை போலீஸாா் சுபாஷுன் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT