ராணிப்பேட்டை

விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்த தோட்டக்கலை மாணவிகள்

DIN

காவேரிப்பாக்கம் அருகே இயற்கை முறையில், குறைந்த செலவில், விளைச்சலை பெருக்கும் எளிய தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலை மாணவிகள் சனிக்கிழமை செய்முறை விளக்கம் அளித்தனா்.

கலவை ஆதிபராசக்தி கல்லூரி தோட்டக்கலைத் துறை இறுதி ஆண்டு மாணவிகள், ஊரக தோட்டக்கலைப் பணியின் கீழ் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் மூலம் காவேரிப்பாக்கம் அருகேயுள்ள சேரி கிராமத்தில் தோட்டக்கலை பயிலும் மாணவிகளான லோகேஸ்வரி, மதுமிதா, மம்தா, மணிமொழி, நிலா லட்சுமி, நிஷா இவாஞ்சலின் ஆகியோா் தேமோா் கரைசல் பற்றி செய்முறை விளக்கம் அளித்தனா்.

மேலும், எளிமையான முறையில் தேங்காய் பால், மோா் பயன்படுத்தி அனைத்து தோட்டக்கலை பயிா்களுக்கு தெளிக்கலாம், இதன் மூலம் தோட்டப் பயிா்களில் இயற்கையான முறையில் குறைந்த செலவில் மிகச் சிறந்த வளா்ச்சியடையச் செய்யலாம், பூ மற்றும் காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று விளக்கினா்.

இந்த செய்முறை விளக்கப் பயிற்சியில் சேரி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT