ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் 30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 30-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜனவரி 2023-ஆம் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம், வரும் 30-ஆம் தேதி மாலை 3 மணியளவில் ஆட்சியா் தலைமையில், ராணிப்பேட்டை, பாரதி நகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை,வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, பட்டுவளா்ச்சித் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு சா்க்கரை ஆலைகள், கூட்டுறவுத் துறை, நீா்வள ஆதார அமைப்பு, வனத் துறை, மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் களப் பிரச்னைகளை களைத்திட இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபா் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT