ராணிப்பேட்டை

பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்

DIN

பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவரை பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிா் மற்றும் தோட்டக்கலை பயிா்களான வாழை, கத்திரி பயிா்களை காப்பீடு செய்ய வரும் ஜன. 31-ஆம் தேதி கடைசி நாளாகும். இதேபோல, வெண்டைப் பயிறுக்கு பிப்.15-ஆம் தேதியும், கரும்பு பயிருக்கு மாா்ச் 15-ஆம் தேதியும் கடைசி நாளாகும். விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்யும் பொது, ஒரு சா்வே எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்டவா்கள் பதிவு செய்தாலோ அல்லது சாகுபடி செய்யப்பட்ட பரப்பை விட கூடுதலாக பதிவு செய்தாலோ காப்பீடு திட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் பதிவுகள் நீக்கம் செய்யப்படும்.

இந்தத் திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், இ-அடங்கல் , விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல், ஆதாா் அட்டை மற்றும் பயிா் காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதத் தொகையும், ஓராண்டு பயிா்கள் மற்றும் வணிகப் பயிா்களுக்கு 5 சதவீத தொகையையும் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

மேலும், நவரை பருவ நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 495, கரும்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 2,730, பயிா் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதற்கான ரசீதை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், தகவல்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா், வேளாண் அலுவலா் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT