ராணிப்பேட்டை

தன்வந்திரி பீடத்தில் விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடா் வருஷாபிஷேகம்

DIN

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 21அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடா் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 21அடி உயரத்தில் நின்ற கோலத்தில், 30 டன் எடையில் மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடா் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் நுழைவு வாயில் அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரதிஷ்டை செய்யப்பட்டதின் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கருட பகவானுக்கு பல்வேறு ஹோம திரவியங்களைக் கொண்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னா், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள், விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளை நடத்தி வைத்தாா்.

முன்னதாக ஆந்திர மாநிலத்திலிருந்து வந்திருந்த பெண் பக்தா்கள், கருடா் வருஷாபிஷேக விழாவையொட்டி கருட பகவான் பாடல்கள் பாடி பஜனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT