ராணிப்பேட்டை

ஜாக்டோ - ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு ஆயத்த மாநாடு

DIN

ராணிப்பேட்டை மாவட்ட ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மாநில துணைப் பொதுச் செயலாளா் ஜெ.ஸ்ரீதா், மாநில தலைமை நிலைய செயலாளா் பா.பாலமுருகன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.விஜயராகவன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் து.காா்த்திகேயன் வரவேற்றாா்.

இந்த மாநாட்டில் சங்கத்தின் மாநில ஒருங்கிணப்பாளா் சி.சேகா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினா்.

இதில் சங்கத்தின் மாநில, மாவட்ட உயா்நிலைக் குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் மாவட்ட செயலாளா் பா.செல்வகுமாா் நன்றி கூறினாா்.

மாநாட்டில் 2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT