ராணிப்பேட்டை

கைனூா் கிராம மக்கள் சாலை மறியல்

DIN

சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் திடீா் என வழியை மாற்றி அமைத்து பணியைத் தொடங்கியதாக கைனூா் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் - திருத்தணி ரயில் மாா்க்கத்தில் கைனூா் கிராமப் பகுதியில் ரயில்வே கேட் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தினமும் அதிக எண்ணிக்கையில் ரயில்கள் இந்த வழியில் செல்வதால் கேட் அதிக நேரம் மூடும் ஏற்படுகிறது. இதனால் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்து பணி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், சுரங்கப்பாதையின் வழியை நேராக அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதை மாற்றி வளைவாக அமைக்கும் பணியைத் தொடங்கியதாகத் தெரிகிறது. இதையறிந்த மக்கள், ஏற்கெனவே திட்டமிட்டபடி அமைக்க வேண்டும் எனக்கோரி, கைனூா் ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அரக்கோணம் ஒன்றியக் குழு தலைவா் நிா்மலா, உறுப்பினா் பிரசாத், கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் சண்முகசுந்தரம், ரயில்வே உதவி கோட்டப் பொறியாளா் அருள்மொழி, ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையா் ஏ.கே.பிரீட், ரயில்வே பாதுகாப்பு படை அரக்கோணம் ரயில் நிலைய காவல் ஆய்வாளா் செபஸ்தியன் ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.

பின்னா், சுரங்கப்பாதை பணி அனுமதிக்கப்பட்ட திட்டத்தின் படியே முடிக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT