தமிழ்நாடு

அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம்!

19th May 2023 12:53 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (மே 19) நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த மே 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 985 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். 

இந்நிலையில், விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.  விருப்பமுள்ளவா்கள் http://www.tngasa.in  எனும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ஆம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மே 25 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்காக சோ்க்கை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT