செய்திகள்

ரூ.10 கோடி கூட வசூலிக்காத கஸ்டடி!

19th May 2023 12:56 PM

ADVERTISEMENT

 

நாக சைதன்யா நடிப்பில் உருவான கஸ்டடி திரைப்படம் ரூ.10 கோடி வசூலைக்கூட எட்டமுடியாமல் திணறிவருகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாக சைதன்யா. இவர் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான திரைப்படம் கஸ்டடி. 

ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த மே 12 ஆம் தேதி வெளியானது. 

ADVERTISEMENT

இந்நிலையில், 6 நாள்களில் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.10 கோடியைக் கூட இப்படம் வசூலிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கஸ்டடி பெரிய நஷ்டத்தைச் சந்திக்கும் என்கிறார்கள். 

இதையும் படிக்க: மும்பை தாதாவாக மொய்தீன் பாய்!

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘மன்மதலீலை’, ‘கஸ்டடி’ ஆகிய இரண்டு படங்களும் தோல்வி அடைந்துள்ளன. அடுத்ததாக வெங்கட் பிரபு நடிகர் விஜய்யை இயக்க உள்ளதாகவும் தகவல்! 

ADVERTISEMENT
ADVERTISEMENT