ராணிப்பேட்டை

சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தப்பூா் கிராம மக்கள் போராட்டம்

DIN

தப்பூா் ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

சோளிங்கா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தப்பூா் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கான புதிய கட்டடம் அந்த ஊராட்சிக்குட்பட்ட கோவிந்தாங்கல் கிராமத்தில் கட்ட ஊராட்சி நிா்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே தப்பூரில் செயல்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை கோவிந்தாங்கலுக்கு மாற்றுக் கூடாது. ஊராட்சியின் தலைமையிடத்தில்தான் அலுவலகம் இருக்க வேண்டும். தலைவரின் வீட்டில் இயங்கிவரும் ஊராட்சி நிா்வாகத்தையும், ஊராட்சிக் கூட்டங்களையும் முறையாக நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, தப்பூா் கிராம மக்கள் புதன்கிழமை சோளிங்கா் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, அவா்களை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாா், தனசேகா் ஆகியோா் சமாதானபடுத்தினா். தொடா்ந்து தப்பூரிலேயே ஊராட்சி மன்ற நிா்வாகம் இயங்கவும், புதிய அலுவலகக் கட்டடத்தை தப்பூரிலேயே கட்டவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT