ராணிப்பேட்டை

ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டத்தில் 27 தீா்மானங்கள்

DIN

ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டத்தில் 27 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்ரீமதிநந்தகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உப்புபேட்டை ஊராட்சி கணபதி நகா் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைப்பது, கீழ்குப்பம் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா் கால்வாய் அமைப்பது என்பன உள்ளிட்ட 27 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணமூா்த்தி, கஜபதி, சரண்ராஜ், ஜெயகாந்தன், தீபிகா, காஞ்சனா சேகா், காஞ்சனா, சுசிலா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT