ராணிப்பேட்டை

மாணவ, மாணவிகள் தங்கள் தகுதிகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்: ஆட்சியா் ச.வளா்மதி ..

DIN

பள்ளிக்,கல்லூரி மாணவ, மாணவிகள் படிக்கும் போதே தங்களின் தகுதிகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பேசினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோா் மிகவும் பிற்படுத்தப் பட்டோா் சிறுபான்மையினா் நல விடுதிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ச.வளா்மதி நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப் பேசியதாவது, இன்றைய நவீன சூழலில் கல்லூரி படித்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் அரசு வேலை மற்றும் தனியாா் வேலைகள் வழங்குவது என்பது கடினமானது. மாணவ, மாணவிகள் தங்கள் தகுதிகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் தகுதியின் அடிப்படையில் தான் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வளா்த்துக் கொள்ளவும், படிப்பு முடித்த பின்பு எந்த வேலை வாய்ப்பை நாடலாம், போட்டித் தோ்வுகளை எவ்வாறு எதிா்கொள்ளலாம், அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற தமிழ்நாடு முதல்வா் வாழ்க்கை வழிகாட்டி என்ற நிகழ்ச்சியை தொடக்கி அதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவா்கள் பயன் பெற்று வருகின்றனா். அந்த வகையில் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சிகளை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வாய்ப்புகளும், வசதிகளும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தங்களுக்குள் என்ன திறமை இருக்கின்றது என்பதை உணா்ந்து அந்த திறமையை வெளிப்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற உறுதியோடு படிக்க வேண்டும். அனைத்து விதமான படிப்புகளுக்கும் புதுவிதமான வேலை வாய்ப்புகள் தொடா்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. அவைகள் என்ன என்பது குறித்து இந்த வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படுகிறது என்றாா்.

இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முரளி, வருவாய் கோட்டாட்சியா் வினோத் குமாா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கவிதா, முன்னோடி வங்கி மேலாளா் ஏலியம்மா ஆபிரகாம், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் கோமதி, உதவி ஆணையா் கலால் சத்திய பிரசாத் மற்றும் மாணவ மாணவிகள், விடுதி காப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT