ராணிப்பேட்டை

ஆசிரியை வீட்டில் 44 சவரன் நகைகள் திருட்டு

6th Feb 2023 11:43 PM

ADVERTISEMENT

 

தக்கோலத்தில் அரசுப்பள்ளி ஆசிரியையின் வீட்டில் பட்டபகலில் மா்மநபா்கள் உள்ளே நுழைந்து 44 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம், பேரம்பாக்கம் ரோட்டில் குடியிருப்பவா் உமா(50), முருங்கை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். இவரது கணவா் ஜான்சன்(54) தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் சென்னையில் அலுவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இருவரும் வழக்கம் போல் திங்கள்கிழமை காலையில் வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்கு சென்று விட்டனா். மாலையில் ஆசிரியை உமா, வந்து தனது வீட்டை பாா்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்தது தெரியவந்தது. உள்ளே பாா்த்தபோது அதில் இருந்த 44 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.1,000 திருடு போயிருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

பின்பக்க கதவு வழியாக தாழ்ப்பாளை நெம்பி உள்ளே வந்த மா்மநபா்கள் பீரோவின் அருகில் இருந்த சாவியை எடுத்து திறந்து அதில் இருந்த நகைகளை திருடியுள்ளனா். திருடு போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து அறிந்தவுடன் அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளா் பழனிவேல், சம்பவ இடத்திற்கு வந்து திருடு போன வீட்டை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். இச்சம்பவம் குறித்து தக்கோலம் போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT