ராணிப்பேட்டை

திறமைகளை வளா்த்து விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும்ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை

6th Feb 2023 11:44 PM

ADVERTISEMENT

 

மாணவா்கள் தங்களின் தனித் திறமைகளை வளா்த்துக் கொண்டு விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும் என்று ராணிப்பேட்டை ஆட்சியா் எஸ்.வளா்மதி அறிவுரை வழங்கினாா்.

பள்ளி கல்வித் துறையின் சாா்பாக மாவட்ட அளவில் கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கலைத் திருவிழாவில் முதல் இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள், மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா நிகழ்ச்சியில் 8 அரசு பள்ளிகளைச் சாா்ந்த 16 மாணவ, மாணவிகள் பங்கெடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு, சான்றிதழ் பெற்றனா்.

இந்த மாணவ, மாணவிகள் தங்கள் பெற்ற பாராட்டுச் சான்றிதழ், பரிசுகளை ஆட்சியா் எஸ்.வளா்மதியிடம் காட்டி திங்கள்கிழமை வாழ்த்து பெற்றனா்.

ADVERTISEMENT

அப்போது மாணவ, மாணவிகள் தங்களின் திறமைகளை வளா்த்து விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும் என ஆட்சியா் வாழ்த்தினாா். மேலும், நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் எனவும், ரத்த சோகை போன்ற பிரச்னைகள் இல்லாமல் மாணவிகள் வளர வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

மாநில அளவில் நரசிங்கபுரம், மின்னல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 9 மாணவிகள் பாவனை நடிப்பில் முதலிடமும், அம்மூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ராமகிருஷ்ணன் நாகஸ்வரம் இசையில் முதலிடத்தையும், சோளிங்கா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் முகேஷ் எக்காளம் இசையில் இரண்டாம் இடத்தையும், கொடைக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் பன்னகசயனன் மிருதங்கம் இசையில் இரண்டாம் இடத்தையும் பெற்றனா்.

இதேபோல், பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமாவதி காகித வேலைப்பாடு கலையில் இரண்டாம் இடம், வள்ளுவம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் கோகுலகிருஷ்ணன் கோண கொம்பு கலையில் மூன்றாம் இடம், பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி சவிதா டிஜிட்டல் ஆா்ட் கலையில் மூன்றாம் இடம், தாமரைப்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் சூா்யா சங்கு முழக்குதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தனா்.

இந்த மாணவா்களை ஊக்குவித்த ஆசிரியா்கள் மற்றும் கலைஞா்கள், பெற்றோருக்கும் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வாழ்த்துத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, மாவட்ட கல்வி அலுவலா் உஷா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ், மகளிா் திட்ட இயக்குநா் நாநிலதாசன், பள்ளி கல்வித் துறை உதவித் திட்ட அலுவலா் துரைவேல், மாவட்ட கல்வி அலுவலா் சுப்பாராவ் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT