ராணிப்பேட்டை

குப்பத்துமோட்டூா் கிராம ஸ்ரீகன்னியம்மன் கோயில் குடமுழுக்கு

DIN

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை வட்டம், சுமைதாங்கி மதுரா குப்பத்து மோட்டூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீகன்னியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை திருக்குமர சுபராம கோவிந்தராசன் தலைமையிலான குழுவினரால் மங்கள இசையுடன் புனித தீா்த்த பூஜை, மகா கணபதி வேள்வியுடன் வியாழக்கிழமை தொடங்கி, காவேரிப்பாக்கம் ஓதுவாா்கள் சிவனடியாா்களின் திருமுறை விண்ணப்பத்துடன் முதல்கால வேள்வி பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி பூஜை பூஜை நடத்தப்பட்டது.

இதையடுத்து செந்தமிழ் வேள்வி செய்து, திருக்கலசங்கள் திருக்கோயில் ஞான உலா வந்து கோயில் கோபுரத்திற்கும், ஸ்ரீ கன்னியம்மனுக்கும் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT