ராணிப்பேட்டை

கணவன் வெட்டிக் கொலை: மனைவி கைது

4th Feb 2023 04:35 AM

ADVERTISEMENT

வாலாஜாப்பேட்டை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவியை, போலீசாா் கைது செய்தனா்.

வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூா் வடமேட்டுத் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஏழுமலை (48), மனைவி கலைச்செல்வி (38). இவா், தனியாா் ஷூ கம்பெனியில்வேலை செய்து வந்தாா். இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்த நிலையில், ஏழுமலை அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த மனைவி, அருகில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டியதால் ஏழுமலை அதே இடத்தில் இறந்தாா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்து வந்த வாலாஜா போலீஸாா் ஏழுமலையின் சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கலைச்செல்வியைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கணவனை, மனைவியே வெட்டிக்கொன்ற சம்பவம் வாலாஜா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT