ராணிப்பேட்டை

நங்கமங்கலம் ஸ்ரீமதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம்

4th Feb 2023 04:34 AM

ADVERTISEMENT

 பனப்பாக்கத்தை அடுத்த நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் மற்றும் வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் உடனுறை ஸ்ரீமதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்துக்கு அருகில் உள்ள இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை (பிப். 1)கிழமை தொடங்கியது. அன்றைய தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புதிய விக்ரகங்கள் கரிகோலம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக சாலை விசேஷ மந்தர பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற மூன்றாம் கால யாக சாலை பூஜைகளுக்குப் பிறகு ஸ்ரீமாரியம்மன் மற்றும் வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் உடனுறை ஸ்ரீமதுரைவீரன் சன்னிதியில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனையும், மதுரைவீரனையும் வழிபட்டனா். மாலையில் மதுரைவீரன் திருக்கல்யாணமும், சுவாமி திருவீதிஉலாவும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் நங்கமங்கலம் கிராம பொதுமக்களோடு இணைந்து செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT