ராணிப்பேட்டை

அரசு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

3rd Feb 2023 12:42 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையத்தால், 2022 -ஆகிய பணயிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான தோ்வை தமிழ் மொழியில் எழுதலாம். கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். வயது வரம்பு 1.1.2023 அன்று 18 முதல் 27 வயது ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள்; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளா்வு உண்டு.

தோராயமாக 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் (நாடு முழுவதும்) உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 17.02.2023. விண்ணப்பிக்க இணையதள முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

போட்டித் தோ்வுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரா்கள் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், எண்.9, ஆற்காடு சாலை, (ராணிப்பேட்டை பேருந்து நிலையம்), ராணிப்பேட்டை- 632401 என்ற முகவரியில் அணுகலாம். அல்லது 04172-291400, 94990 55897 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT