ராணிப்பேட்டை

வள்ளலாா் நினைவு தினம்: 5-இல் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

3rd Feb 2023 12:43 AM

ADVERTISEMENT

வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி வரும் 5 -ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைள் மற்றும் மதுக் கூடங்களையும் மூட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வரும் 5-ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) வள்ளலாா் நினைவு தினம் என்பதால் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஒட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடிவைக்க வேண்டும்.

மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்து மதுக்கூட உரிமதாரா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT