ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் ஆய்வு

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

அரக்கோணம் நகராட்சியில் பல்வேறு இடங்களில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அரசு நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.பொன்னைய்யா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

‘கள ஆய்வில் முதல்வா்’ திட்டத்தின் ஒரு பகுதியாக நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.பொன்னைய்யா அரக்கோணம் நகராட்சியில் வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு வளாகத்தில் நடைபெறும் அறிவுசாா் மையக் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, அதே பகுதியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ள இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், காந்தி நாளங்காடிக்குச் சென்ற அவா், அங்காடிகளில் உள்ள கட்டடத்தை இடித்துவிட்டு ரூ.9 கோடியில் கட்டப்பட்ட இருக்கும் புதிய கட்டுமானப் பணிகளுக்கான வரைப்படத்தையும், கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது, நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி, துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகராட்சி ஆணையா் லதா, பொறியாளா் ஆசீா்வாதம், சுகாதார அலுவலா் மோகன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவா் சி.ஜி.எத்திராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT