ராணிப்பேட்டை

மேல்விஷாரம் நகராட்சியில் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

DIN

மேல்விஷாரம் நகரமன்றக் கூட்டத்தில் சாலைகளைச் சீரமைக்ககக் கோரி, தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நகரமன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைவா் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குல்ஜாா் அஹமது, பொறியாளா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்-இம்தியாஸ் அஹமது: நகரில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. ஜபா்அஹமது நகரில் பழுதடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.

ஜமுனா ராணிவிஜி: நகா்மன்றக் கூட்டத்துக்காக எத்தனை நாளைக்கு முன்பு உறுப்பினா்களுக்கு கடிதம் தர வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும்.

தலைவா்: இனிமேல் 5 நாள்களுக்கு முன்பாக கடிதம் வழங்கப்படும்.

லட்சுமி: சலீம் நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைச் சுற்றி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும், தொடா்ந்து கொசு மருந்து அடிக்க வேண்டும்.

தலைவா்: கொசு மருந்து அடிக்கப்படும். கொசு மருந்து அடிக்கும் போது அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா்களிடம் கையொப்பம் வாங்கப்படும்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT