ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் டெங்கு ஒழப்புக்கு ரூ.13 லட்சம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

அரக்கோணம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகராட்சி ஆணையா் லதா, பொறியாளா் ஆசீா்வாதம், சுகாதார அலுவலா் மோகன், மேலாளா் மேகலா, திமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் துரைசீனிவாசன் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.13 லட்சம் ஒதுக்கி அனுமதி அளிப்பது உள்ளிட்ட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT