ராணிப்பேட்டை

ஆற்காட்டில் வேலைவாய்ப்பு முகாம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், ஆற்காடு ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பங்கேற்று திறன் மேம்பாட்டு பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு வேலைவாய்ப்புகான பணி ஆணைகளை வழங்கிப் பேசினாா்.

இளைஞா் திறன் விழாவில் அரசுத் துறை நிறுவனங்கள், மாவட்ட

தொழில் மையம், வேலைவாய்ப்புத் துறை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் மற்றும் 14 தனியாா் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளா்ப்பு பயிற்சிக்கு ஆள்களைத் தோ்வு செய்தனா். இதில், மொத்தம் 301 போ் கலந்து கொண்டனா். இவா்களில் 112 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) நானிலதாசன், ஆற்காடு ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், நகா்மன்றத் துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், மாவட்ட தொழில் மையம் மேலாளா் ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளா் ஆலியம்மா ஆப்ரகாம், உதவித் திட்ட அலுவலா் சாகுல் அமீத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT