ராணிப்பேட்டை

கணவா் கொலை: மனைவி கைது

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தக்கோலம் அருகே கணவரை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள உரியூரைச் சோ்ந்தவா் சீராளன் (38). ஒலி ஒளி சாதனங்கள் கடை உரிமையாளா். இவரது மனைவி சோபனா (30). இவா்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனா்.

தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மதுஅருந்திய நிலையில் வீட்டுக்கு வந்த சீராளன், சோபனாவிடம் தகராறு செய்தாராம். பின்னா், வீட்டுவாயிலில் உள்ள திண்ணையில் படுத்து சீராளன் உறங்கியுள்ளாா்.

இந்த நிலையில், அன்று இரவு சீராளனின் தலையில் கட்டுக் கல்லை சோபனா போட்டுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த சீராளன் உயிரிழந்தாா். இதையடுத்து, தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, சோபனா வீட்டை விட்டு வெளியேறினாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தக்கோலம் போலீஸாா், வழக்குப் பதிந்து, கிராமத்தில் ஓா் இடத்தில் இருந்த சோபானாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT