ராணிப்பேட்டை

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்: சீா்காழி சிவசிதம்பரம் பங்கேற்பு

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா திங்கள்கிழமை வெகுவிமரிசையாக தொடங்கியது. திரைஇசை பின்னணி பாடகா் சீா்காழி சிவசிதம்பரம் விழாவை தொடக்கி வைத்தாா்.

அரக்கோணம் அருகே உள்ள நெமிலி பாலா பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி இன்னிசை விழா வெகுவிமரிசையாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பொதுமுடக்கத்தால் இந்த விழா எளிமையாக நடைபெற்ற நிலையில், இந்தாண்டு விழா திங்கள்கிழமை வெகுவிமரிசையாக தொடங்கியது.

விழாவுக்கு பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்தாா். அன்னைபாலா கலசஸ்தாபனத்தை பாலாபீட நிா்வாகி மோகன் நடத்தி வைத்தாா். திரைப்பட இன்னிசை பாடகா் மருத்துவா் சீா்காழி சிவசிதம்பரம் பங்கேற்று, அம்பாள் பாடல்களை பாடி விழாவை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து பீடாதிபதி எழில்மணி எழுதிய அன்னை பாலா அற்புதங்கள் எனும் தலைப்பில் சென்னை, வானதி பதிப்பகத்தினா் பிரசுரித்த நூலை, சீா்காழி சிவசிதம்பரம் வெளியிட்டாா்.

விழாவில், அன்னை பாலா ஆா்த்தி எனும் சிறப்பு ஆரத்தி நிகழ்வை நெமிலி பாபாஜி மேற்கொண்டாா். இதில், திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவிற்கு பாலரத்னா பட்டத்தை சீா்காழி சிவசிதம்பரம் மற்றும் பீடாதிபதி எழில்மணி இருவரும் இணைந்து வழங்கினா்.

ADVERTISEMENT

விழாவில் வானதி பதிப்பக உரிமையாளா் ராமநாதன், பீடத்தின் செயலா் முரளீதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை அன்னை பாலா ஆன்மிக குடும்பத்தினா் செய்திருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT