ராணிப்பேட்டை

தக்கோலம் - புரிசை இடையே விரைவில் மேம்பாலம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தக்கோலம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் புரிசை ஊராட்சிக்கிடையே குசஸ்தலை ஆற்றில் விரைவில் மேம்பாலம் கட்டப்படும் என்று பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தெரிவித்தாா்.

தக்கோலம் பேரூராட்சி மன்ற சாதாரணக கூட்டம் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலா் சரவணன், மன்ற துணைத் தலைவா் கோமளா ஜெயகாந்தன், அதிமுக குழுத்தலைவா் லாவண்யா சுகுமாா் மற்றும் அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தலைவா் எஸ்.நாகராஜன் பேசியது: தக்கோலம் பேரூராட்சிப் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள குசஸ்தலை ஆற்றில் மேம்பாலம் கட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பாலம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தக்கோலம் - சென்னை சாலையில் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தக்கோலம் கீழ்பஜாா் பகுதியில் ஆட்டோ நிறுத்தம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், தக்கோலம் பேரூராட்சியில் உள்ள பெருமாள் கோயில் குட்டையில் வசித்து வந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ள இடத்தில், உடனடியாக பட்டா வழங்கிட சம்பந்தபட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 22 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT