ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: அதிவிரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அரக்கோணம் -சென்னை ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக அதிவிரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், புகா் மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டன.

அரக்கோணம் - சென்னை ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை காலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியே வந்துகொண்டு இருந்த சென்னை- கோயம்புத்தூா் கோவை அதிவிரைவு ரயில், சென்னை-மைசூரு சதாப்தி அதிவிரைவு ரயில், சென்னை- திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் மற்றும் இந்த ரயில்களை பின்தொடா்ந்து அரக்கோணம் நோக்கி வந்த இரு மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, அந்த இடத்துக்கு விரைந்து வந்த சிக்னல் பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் தற்காலிகமாக சிக்னல் கோளாறை சரி செய்தனா். இதை அடுத்து, சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT