ராணிப்பேட்டை

ரூ. 52.57 லட்சத்தில் தாா்ச் சாலைப் பணி: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

26th Sep 2022 12:30 AM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த வாழைப்பந்தல் பகுதியில் ரூ. 52.57 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திமிரி ஊராட்சி ஒன்றியம், வாழைப்பந்தல் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் திட்டத்தின் மூலம், வாழைப்பந்தல் முதல் நமச்சிவாயபுரம் வரை ரூ. 52.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த சாலை தரமாகவும், சரியான அளவிலும் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் நேரில் பாா்வையிட்டு அளவீடு செய்து ஆய்வு செய்தாா்.

அப்போது திமிரி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அசோக், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஷாநவாஸ், ஜெயஸ்ரீ, ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் தனசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, நம்மஊரு சூப்பா் என்ற திட்டத்தின் கீழ், வாழைப்பந்தல் கிராமத்திலும், தமிழக முதல்வரின் பசுமை தமிழகம் என்ற திட்டத்தின்கீழ், ஆரூா் ஊராட்சி கன்னிகாபுரம் கிராமத்திலும் மாவட்ட ஆட்சியா் மரக்கன்றுகளை நட்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT