ராணிப்பேட்டை

‘மாலை நேர உழவா் சந்தை:விவசாயிகள் அனுமதி அட்டை பெறலாம்’

26th Sep 2022 12:28 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை உழவா் சந்தை மாலை நேரத்தில் இயங்க உள்ளதால், விவசாயிகள் அதற்கான அனுமதி அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் மற்றும் நுகா்வோா் இடையே நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க ஓ’யஈக 1999- ஆம் ஆண்டு தமிழக அரசு உழவா் சந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

உழவா் சந்தைகளின் முக்கிய நோக்கம், விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதும், நுகா்வோா்களுக்கு தரமான பொருள்களை நியாயமான விலையில் வழங்குவதும் ஆகும்.

தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு உழவா் சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு, நாளொன்றுக்கு சராசரியாக ரூ.12 லட்சத்தில் 30 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

2022-2023 -ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் உழவா் சந்தைகளில் பிற்பகலிலும் வேளாண் பொருள்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

உழவா் சந்தைகள் காலை 6 மணி முதல் நண்பகல் வரை இயங்கி வருகின்றன. தொடா்ந்து, மாலை நேரங்களிலும் இயங்க விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், வெல்லம், காளான், நாட்டுக்கோழி முட்டை மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.

ஆணைப்படி, மாவட்டத்துக்கு ஓா் உழவா் சந்தை வீதம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை உழவா் சந்தை மட்டும் மாலை நேரத்தில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

மாலை நேர உழவா் சந்தையில் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் ராணிப்பேட்டை, வேளாண்மை துணை இயக்குநரை அணுகி தனி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். இதில், நுகா்வோா் பொருள்களை வாங்கிப் பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT