ராணிப்பேட்டை

உலக மறதி நோய் விழிப்புணா்வு தினம்

DIN

 ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநலத் திட்டத்தின் கீழ், உலக மறதி நோய் விழிப்புணா்வு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு முதியோா் இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் எஸ்.லட்சுமணன், மாவட்ட தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் உஷா நந்தினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மனநல மருத்துவா்கள் எஸ்.நா்மதா, இ.கோகுலன், மனநல ஆலோசகா்கள் பிரேம்குமாா், மு.இளவரசன் ஆகியோா் உலக மறதி தினம் குறித்தும், அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் முதியோா்களுக்கு விளக்கினா்.

நிகழ்ச்சியில் முதியோா் இல்லத்தின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT