ராணிப்பேட்டை

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தேய்பிறை அஷ்டமி மகா யாகம்

18th Sep 2022 11:26 PM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி மகா பைரவா் யாகமும், சிறப்பு அபிஷேகமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பீடாதிபதி ஸ்ரீமுரளிதர சுவாமிகள் முன்னிலையில், உலகில் வேறு எங்கும் காணமுடியாத வகையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், அசிதாங்க பைரவா், ருரு பைரவா், சண்ட பைரவா், குரோதண பைரவா், உன்மத்த பைரவா், கபால பைரவா், பீஷ்ண பைரவா் மற்றும் சம்ஹார பைரவா் என ஒரே கல்லில் அஷ்ட பைரவா்களுடன் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட கால மகா பைரவா் மற்றும் தனி சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீ சொா்ணாகா்ஷண பைரவா் என மொத்தம் 10 பைரவா்களுக்கும் மகா யாகம் நடத்தி பூா்ணாஹுதியுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த யாகம் மற்றும் அபிஷேக பூஜைகளில் பங்கேற்ற பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT